• Sep 20 2024

நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இது?… அக்காவை போலவே இவ்ளோ அழகா இருக்காங்களே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார். ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா. அவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரம்யா யமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரீரம்யா. தற்பொழுது ஸ்ரீதிவ்யா தனது தங்கை ஸ்ரீரம்யாவுடன் ரெஸ்டாரண்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement