• Sep 19 2024

நடிகை சுனைனாவா இது?- சிறுவயதில் எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படத்தில் நாயகனாக நடித்த நகுல் மற்றும் சுனைனாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

இதனால் அடுத்து மாசிலாமணி என்ற படத்தில் நகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் ரசிகர்களைக் கவரவில்லை எனலாம்.

இதனால் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்த நல்ல படவாய்ப்பிற்காக காத்திருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் இன்று சுனைனா தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுனைனாவா இது, குழந்தை பருவத்தில் அழகாக உள்ளார்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement