தமிழ் சினிமாவில் ரேடியோ ஜோக்கியாக தனது கெரியரை ஆரம்பித்து வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் RJ பாலாஜி . இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். அந்த படத்தில் நயன்தாரா தான் மூக்குத்தி அம்மனாக நடித்து இருந்தார்.
கடவுள் பெயரை பயன்படுத்தி பணம் ஈட்டும் சாமியார்களின் உண்மை முகத்தை காட்டும் கதை என்பதால் மூக்குத்தி அம்மன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் தற்போது RJ பாலாஜி அளித்த ஒரு பேட்டியில் முதலில் மூக்குத்தி அம்மனாக நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை என கூறி இருக்கிறார்.
முதலில் மூக்குத்தி அம்மன் ரோலில் அனுஷ்காவை தான் நடிக்க வைக்க முடிவெடுத்து அணுகினாராம். அவர் நடிக்க ஒப்புக்கொண்டாலும் ஷூட்டிங் வர 8 மாதங்கள் ஆகும் என கூறினாராம்.
அதுவரை காத்திருக்க முடியாது என சொல்லி RJ பாலாஜி அதன்பின் நயன்தாராவை அணுகினாராம். அவர் கதை கேட்டுவிட்டு உடனே ஓகே சொல்லிவிட்டார் என RJ பாலாஜி கூறி இருக்கிறார். மேலும் இவரது நடிப்பில் அண்மையில் ரன் பேபி ரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!