• Nov 17 2024

'வாரிசு' படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்... இருக்கிற பிரச்சனையில் இது வேறயா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இதுவரை சுமார் 65 படங்களில் நடித்து முடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக வாரிசு படம் உருவாகி வருகின்றது. இப்படமானது வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. 

இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.


அந்தவகையில் இத்திரைப்படமானது வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது.

இதற்கான காரணம் என்னவெனில் இப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீரென திட்டவட்டமாக அறிவித்தமை தான். இப்பிரச்சினை தற்போது ஓரளவிற்கு ஓய்ந்துள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்த மற்றோர் சிக்கல் உருவெடுத்துள்ளது.


அதாவது 'வாரிசு' திரைப்படத்தில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்பிக்குமாறு கூறி 'வாரிசு' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement