• Sep 20 2024

ஈரமான ரோஜாவே சீரியல் காபிரில்லா வாங்கிய இந்த காரின் விலை இத்தனை லட்சமா?- பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் காபிரில்லா. இவர் இதற்கு முதல் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இதனைத் தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தாலும் பிக்பாஸில் பங்கு பற்றியதன் மூலமே தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் 5 லட்சம் பண பெட்டி உடன் வெளியில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். அதற்காக அவரை அதிக பேர் பாராட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஈரமான ரோஜாவே என்னும் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது கேபிரியல்லா டாடா ஹரியர் டார்க் எடிஷன் என்ற காரை அண்மையில் வாங்கியிருந்தார்.

இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி அக் காரின் விலை 25 லட்சம் ரூபாயை விட அதிகமாம். இதனால் பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவிதது வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement