நடிகர் சுமனின் உடல்நிலை குறித்து இணையத்தில் பரவிய தகவலுக்கு மிகவும் கடுமையாக தனது கண்டனத்தை பகிர்ந்துள்ளார்.
1979ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்த நீச்சல் குளம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார் சுமன்.
சினிமாவில் ஏறக்குறைய 4 தசாப்த கால வாழ்க்கையில், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்கள் என கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகரான சுமன் தெலுங்கில் வெங்கடேஸ்வரா, சிவன், ராமர் போன்ற புராணக் கதாபாத்திரங்களில் நடித்தார். அத்தோடு 1993ம் ஆண்டு பாவா பாவமரிதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான நந்தி விருதை இவர் வென்றுள்ளார். ஜாக்கி என்கிற சாகர் என்ற மலையாளத் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.
அத்தோடு ஏவிஎம் ப்ரொடக்சனில் இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார் சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் சுமன். 60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் 250 கோடி வசூல் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.மேலும் இந்த அப்படத்தின் இடைவேளை காட்சி ரஜினி vs சுமன் பயங்கர மாஸாக இருக்கும்.
இந்நிலையில், நடிகர் சுமன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டாக சில யூடியூப் சேனல்களில் செய்திகள் பரவின. இதற்கு பதிலளித்த சுமன்,நான் நன்றாகத்தான் இருக்கிறேன்,நான் இறந்துவிட்டேன் என்று இணையத்தில் வெளியான செய்து குறித்து நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. ஏன் இப்படி பொய்யான செய்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை எல்லாம் பணத்திற்காகத்தான்.
அத்தோடு தவறான செய்தியை பரப்பிய யூடியூப் சேனல்களுக்கெதிராக வழக்கு தொடர உள்ளேன். மேலும் சில யூடியூப் சேனல்களால் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாமென தனது ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார். நடிகர் சுமன் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்திலும், விஜய்யுடன் குருவி படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்திலும் நடித்துள்ளார்.
Listen News!