• Nov 19 2024

தொகுப்பாளினி டிடியின் கணவரா இது?- ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி. இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாத்திரமல்லாது பிரபலங்களை நேர்காணல் செய்தும் வருகின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இது தவிர சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது சுந்தர்சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது. அந்த வகையில் அண்மையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் வந்திருந்தார்.


மேலும் இவர்  கடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பனும் காதலனுமான  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.மூன்று வருடங்கள் நீடித்த இந்த திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதன்பின் இருவரும் அவரவர் வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் இவரின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் திரையுலக நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.


இந்நிலையில், அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement