• Nov 10 2024

‘இப்படித்தான் நீ முன்னுக்கு வந்தியா? ‘ஏண்டா நான் சிவாஜிடா,- நடிகர் திலகத்தையே கடுப்பாக்கிய இயக்குநர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு லெஜெண்டாக வலம் வந்தவர்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 60, 70களில் அவர் கட்டிய சாம்ராஜ்யம் இன்று வரை ரசிகர்களால் பிரமிப்பாக பேசப்பட்டு வருகின்றது. அவரை பற்றி தினந்தோறும் பல செய்திகளை ஊடகங்கள் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் நாம் பார்த்துக் கொண்டு தான் வருகின்றோம். இந்த நிலையில் சிவாஜியை பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்களை நடிகர் பாக்யராஜ் ஒரு மேடையில் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயதில் இருந்தே மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நடிகர் சிவாஜியை வைத்து படம் எடுக்கப் போகிறோம் என்றாலே அனைவருக்கும் ஒரு வித பதற்றம் இருக்கத்தான் செய்யும். அதே போலதான் பாக்யராஜுக்கும் இருந்திருக்கிறது. தாவணிக்கனவுகள் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சிவாஜியுடன் இணைகிறார் பாக்யராஜ்.


அப்போது ஷார்ட் ரெடியானதும் இன்னும் ஸ்கிரிப்ட் பேப்பர் கொடுக்கவில்லையே என்று சிவாஜி ஒவ்வொரு உதவியாளர்களிடமும் கேட்டாராம். இதோ எடுத்து வருகிறோம் என யாரும் எடுத்துக் கொடுக்கவில்லையாம். கடைசியாக பாக்யராஜிடம் கேட்டிருக்கிறார் சிவாஜி. அதற்கு பாக்யராஜ் ‘இல்லன்ன ஸ்பாட்ல தான் நான் சொல்லுவேன், நீங்க சொல்லும் போதுதான் என் உதவியாளர்கள் அதை எழுதிக் கொள்வார்கள் ’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு சிவாஜி ‘ஏன் அந்த நேரத்திலும் எழுதிக்கிட்டு’ என இழுக்க அதற்கு பாக்யராஜ் ‘இல்ல தணிக்கை குழுவுக்கு போகும் போது உதவும் , அதான் எழுத சொல்லுவேன்’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் சிவாஜி ‘ஏன் அந்த காலத்தில் எல்லாம் ஒரு புத்தகம் மாதிரி வைத்திருப்பார்கள், அந்த மாதிரிலாம் கிடையாதா?’ என கேட்க அதற்கு பாக்யராஜ் ‘இல்லன்ன நான் இப்படித்தான் செய்வேன்’ என்று சொல்லியிருக்கிறார்.


அதற்கு சிவாஜி ‘இப்படித்தான் நீ முன்னுக்கு வந்தீயா? என்ன சினிமா எடுக்கிறீங்களோ ’ என கடுப்பாகியிருக்கிறார். அப்படியே போனால் பாரதிராஜாவின் முதல் மரியாதை படப்பிடிப்பிலும் மாட்டிக் கொண்டு முழித்திருக்கிறார் சிவாஜி. அங்கு பாரதிராஜா திடீரென சிவாஜியிடம் ‘அண்ணே அண்ணே அப்படியே மரத்திற்கு பின்னாடி போய் நின்னு எட்டி பாருங்க’ என்று சொல்லுவாராம்.அதற்கு சிவாஜி ‘ஏண்டா எட்டிப் பார்க்கனும் ’ என கேட்பாராம். அதற்கு பாரதிராஜா ‘இல்லன்ன சன் செட் மறைவதற்குள் எட்டிப் பார்க்கனும்’ என்று சொல்லுவாராம். 

அதற்கு சிவாஜி ‘ஏண்டா நான் சிவாஜிடா, எதுவுமே சொல்லாம இப்படி எட்டிப் பார்க்கனும்னா எப்படிடா’ என்று நொந்து கொள்வாராம். அதுமட்டுமில்லாமல் இவன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறதுக்கு அவன் சிஷ்யனே பரவாயில்லை என பாக்யராஜை நினைத்து கொஞ்சம் நிம்மதி அடைவாராம் சிவாஜி. ஆனால் படத்தை பார்த்த பிறகு தான் தெரிஞ்சதான் ஏன் எட்டிப் பார்க்க சொன்னானு. படத்தை பார்த்து பாரதிராஜாவை அப்படி பாராட்டினாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.



Advertisement

Advertisement