• Sep 20 2024

கீர்த்தியா இது..? வாயடைத்துப்போன ரசிகர்கள்-இணையத்தில் கசிந்த புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா பின்புலத்தில் இருந்து வந்து இன்று தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதாவது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், தொழிலதிபர் எனப் பன்முகம் கொண்டு விளங்கி வருகின்ற சுரேஷ்குமார் என்பவரின் இளைய மகளே இவர். அதுமட்டுமல்லாது இவரது தாயாகிய மேனகா பிரபல தென்னிந்திய நடிகை ஆவார்.

இவர் ‘இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்றுவரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். அத்தோடு ஒரு சில படங்களிற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதினையும் பெற்றிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் நடிப்பில் தற்போது ‘மாமன்னன்’, ‘தசரா’, ‘போலோ ஷங்கர்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

இவ்வாறாக திரையுலக அறிமுக காலத்தில் இருந்து இன்றுவரை பல படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற கீர்த்தி சுரேஷ் சோஷியல் மீடியாவிலும் அடிக்கடி எட்டிப்பார்த்து வருவது வழமை. அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி அதனை பதிவிட்டு வருவார்.

நடிகை கீர்த்தியின் சுரேஷின் கைவசம் தற்போது மாமன்னன் திரைப்படம் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் இசையமைக்கிறார்.

நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா உடன் சின்ன வயதில் எடுத்த போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷா இது என ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்து ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement