• Nov 17 2024

குக்வித் கோமாளி வித்யூலேகாவா இது?- உடல் எடையைக் குறைத்து இவ்வளவு வித்தியாசமாக மாறிட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான நீதானே எந்தன் பொன் வசந்தம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் வித்யூலேகா. இவர் இதனைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு,மாலினி 22 பாளையங்கோட்டை  ஜில்லா வீரம் என பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.


மேலும் சந்தானத்துடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்திருக்கின்றார்.தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

நடிகை வித்யூலேகா தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தது தன்னுடைய குடும்ப நபர்களால் தான், நடிகை வித்யூலேகாவின் குடும்பத்தில் பலரும் சினிமா பிரபலமானவர்கள் தான்,இவரது உறவினர் கீதாஞ்சலி முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.


சஞ்சய் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த ஆண்டு முடிவடைந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு பிரபல்யமானார்.இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே குண்டாக இருப்பதால் பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு உள்ளானார்.இதனால் பல முறை மனமுடைந்து சமூக ஊடகள்களில் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இப்போது பல நடிகைகள் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்காக மட்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து வருவதில்அதிகப்படியான ஆர்வத்தை காட்டி வருகிறார்கள்.அந்த வகையில் வித்யூலேகா வெளியிட்ட புகைப்படம்  ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement