• Sep 20 2024

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது?- ஜவான் படத்திலிருந்து லீக்கான போட்டோ- வித்தியாசமான கெட்டப்பில் ஜொலிக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, ஆகிய பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இதனை அடுத்து விஜய்யை வைத்து பிகில், என அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கினார்.தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகின்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இப்படம், செப்டம்பர் 7ஆம் தேதி  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.


 மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 220  கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.


இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் ரிலீசுக்கு முன்பே நயன்தாராவின் புகைப்படம் லீக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா, மிகவும் ஸ்டைலிஷ் நாயகியாக மாறி கோட் - சூட்... அணிந்து ஃப்ரீ ஹேர் அழகில், தேவதை போல் ஜொலிக்கிறார்.  ரசிகர்கள் நயன் ஹாலிவுட் நாயகிகளையே அசர வைக்கும் அழகில் இருப்பதாக கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement