• Sep 20 2024

'பூவே உனக்காக' படத்தில் விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா..? நம்ப முடியலையே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தளபதி விஜய். ஆரம்பத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு சினிமாவில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

1984 இல் விஜய் தனது 10வது வயதில் 'வெற்றி' என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய 'இது எங்கள் நீதி' திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய 'நாளைய தீர்ப்பு' படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி வகிக்கின்றார்.

மேலும் இவர் 3 தமிழக அரசு திரைப்பட விருது, 1 காஸ்மோபாலிடன் விருது,2 விகடன் விருது உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பின் மூலம் நீடித்து நிலைத்திருந்தாலும் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' திரைப்படம் தான் இவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க தளபதி விஜய் ரூ. 5 லட்சம் தான் சம்பளமாக வாங்கினார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு 1996ல் ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கி வந்த நடிகர் விஜய், 25 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் வாரிசு படத்திற்காக ரூ. 108 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றால் நம்பக்கூடிய மாதிரியா இருக்கு? ஆனால் அதுதான் உண்மை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement