• Sep 20 2024

நம்ம அனிருத்தா இவரு..சின்ன வயசில ரொம்ப கியூட்டா இருக்காரு

tech / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திற்கு இசையமைத்து அறிமுகமானவர். இந்த படத்தில் வை திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.

இவர் தனது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களான உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தல, தளபதி ஆகியோருக்கு இசையமைத்து வருகின்றார். இன்றைய கால இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும் என்பதை உணர்ந்து இசை அமைக்கிறார்.

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படம் இவருடைய இசையமைப்பில் வெளியாகி பாடல்கள் அனைத்தும் செம ஹிட் பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அனிருத் சிறுவயதில் தனது அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் இது நம்ம அனிருத்தா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ நீங்களும் பாருங்க ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement