தன்னுடைய 14-ஆவது வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்துப் பின்னர் தன்னுடைய அழகினாலும், சிறந்த நடிப்பினாலும் தமிழ் சினிமாவின் டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவரே நடிகை ரம்யா கிருஷ்ணன். அதாவது இவர் 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக 'வெள்ளை மனசு' என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படமே இவரின் அறிமுகப் படமாகவும் இருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு 1989 இல் தெலுங்கில் வெளியான 'சுட்ரதருலு' என்ற படத்தின் மூலமே சினிமாவில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இப்படத்தில் நடித்தமைக்காக இவர் தேசிய விருதினையும் வென்றிருக்கின்றார். அதுமட்டுமன்றி பல பக்திப் படங்களில் கடவுள்களின் வேடங்களில் நடித்தும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து இருக்கின்றார்.
சுமார் 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை இதுவரைக்கும் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் இன்றும் பல ரசிகர்களால் மறக்க முடியாத படம் என்றால் அது 'படையப்பா' தான். இப்படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்து பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.
இவ்வாறாக பல படங்களில் சிறப்பாக நடித்து வந்த ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 52 வயதாகின்றது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் அழகாக உடையணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிற செய்திகள்
- அறிமுக நடிகை அதிதிக்கு இவ்வளவு சம்பளமா..? இதற்கான காரணம் என்ன..? கிளம்பிய எதிர்ப்புக்கள்..!
- ‘தல’ அஜித் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம்… பள்ளி சீருடையில் ரொம்ப அழகாக இருக்காரே… வெளியான புகைப்படம்..!
- உலக நாயகனுடன் கை கோர்க்கும் நவரச நாயகன்… அதுவும் இந்தப் படத்திலா..?
- ஸ்கூலைக் கட்டடித்து விட்டு அமீர்கானின் படம் பார்க்க சென்ற பிரபல நடிகர்… அவரே கூறிய சுவாரஸியமான தகவல்..!
- கரண் ஜோகர் பற்றி ஓப்பனாகப் பேசிய டாப்ஸி…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!