• Sep 20 2024

நம்ம கயல் ஆனந்தியா இது? எவ்வளவு க்யூட்டா இருக்காங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் கயல் ஆனந்தி. தமிழில் 2014ல் வெளியான பொறியாளன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகியானார். இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் கயல் ஆனந்தி என்றே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அதர்வா ஜோடியாக சண்டி வீரன், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் உட்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தில் அவரது ஜோதி கேரக்டர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இராவண கோட்டம் என்ற படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்துள்ளார்.

2021ம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் கயல் ஆனந்தி. மேலும் இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தையும் பிறந்தது. 

இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. அதன்படி வெளியான புகைப்படங்கள் இதோ...



Advertisement

Advertisement