தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் வெளியாகிய மாநகரம்,மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.அதிலும் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் 500க்கு மேல் வசூல் செய்திருக்கின்றது.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் வசுல் சாதனையையே முறியடித்த கேஜிஎஃப் படத்தின் டைரக்டர் பிரசாந்த் நீல், லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை எடுத்துள்ள விதத்தை மனம் திறந்து பாராட்டி உள்ளார்.இதனைத் தொடர்ந்து விக்ரம் 3, கைதி 2, தளபதி 67 ஆகிய படங்களை இயக்கவுள்ளார்.
விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை தான் இயக்க போவதாக லோகேஷ் சமீபத்தில் அறிவித்தார்.ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விஜய்யின் பிறந்தாளில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் ரசிகர்களின் தேவையை இது பூர்த்தி செய்யவில்லை.ஆனால் தற்பொழுது வெளியாகிய லேட்டஸ்ட் தகவலின், இதற்காக சிறப்பான சென்டிமென்ட் நாளே ஒன்றை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம்.
ஆகஸ்ட் 24 ம் தேதி தான் தளபதி 67 படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆகஸ்ட் 24 ல் அப்படி என்ன ஸ்பெஷல் என விசாரித்தால், இதே தேதியில் தான் 2019 ம் ஆண்டு மாஸ்டர் படத்தின் டைட்டிலை வெளியிட்டார்களாம்.
மாஸ்டர் படம் தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சமயத்திலேயே 100 கோடி வசுல் செய்த படம். அதனால் அதே போல் தளபதி 67 படமும் மாஸ் ஹிட்டாக வேண்டும் என்ற சென்டிமென்ட் காரணமாக தான் தளபதி 67 படத்தின் அறிவிப்பை தள்ளிப் போட்டு வருகிறார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புடவையில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் மானசி
- நயன்தாராவால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து விலகிய சிம்பு- ஓவர் சீன் போட்ட விக்ரம் மற்றும் ஜெயம்ரவி
- நயன்தாராவின் 75-ஆவது படம் தொடர்பான புதிய அப்டேட்…யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் தெரியுமா?
- லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…நிழலாய் பின் தொடரும் சர்ச்சை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!