பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.மேலும் இதில் அடிக்கடி புதிய சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அவ்வாறான புதிய சீரியல்களில் ஒன்று தான் 'சிறகடிக்க ஆசை'. சமீபத்தில் ஆரம்பித்து இருந்தாலும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்களும் தங்களது ஆதரவினைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.மேலும் ஒளிபரப்பாகிய 100 எப்பிஷோட்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த சீரியலில் தற்பொழுது முத்துவும் மீனாவும் முத்துவின் பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளனர். பாட்டி ஊரில் இருவரும் ஜாலியாக இருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க மனோஷ் ரோகினியின் திருமண ஆயத்தங்களும் சூப்பராக நடந்து வருகின்றது.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் மீனாவின் தங்கச்சி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சங்கீதா. சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் இவர் தற்பொழுது குட்டை ஆடையில் ஆட்டம் போட்டிருக்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!