• Sep 20 2024

பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகையா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகதிகழ்பவர் நடிகர் விஜய். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தோல்வி படங்களாகவே அமைந்தன. பின்னர் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின் வெற்றிக்கு கை கொடுத்த திரைப்படங்களில் ஒன்று பூவே உனக்காக. இந்த படத்தில் நடிகை அஞ்சு அரவிந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இவர்  தமிழில் பூவே உனக்காக, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ் மோர், வானத்தை போல என கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

 கடந்த 2002ம் ஆண்டு தேவதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு தொழிலதிபரான வினய் சந்திரன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அட அஞ்சு அரவிந்த் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement