• Sep 21 2024

புதுக்கோட்டை சரவணா திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இவர்?- வித்தியாசமாக வந்திட்டாரே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா. மேலும் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளிவந்த "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" என்ற திரைப்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

நடிகர் சிம்புவின் கல்லூரி தோழியான இவர், புதுக்கோட்டையிருந்து சரவணன் படத்தைத் தொடர்ந்து "ஏ.பி.சி.டி, நெஞ்சில் சில் சில், கண்ணுக்குள்ளே" என ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்து வந்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவர் 2011-ஆம் ஆண்டு மருத்துவரான பரணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.

சினிமா நடிகைகள் பலரும் தமது தலைமுடி, உடைகள் என்பவற்றில் கவனம் செலுத்துவது அதிகம். இவர்கள் அடிக்கடி இந்த விஷயத்தில் தமது ஸ்டைலை மாற்றுவது வழக்கம். இதற்கு நடிகை அபர்ணா ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல.

இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் இவர் ஹேர் கட் பண்ணி வித்தியாசமான ஒரு ஹெட்டப்பில் இருக்கின்றார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement