• Sep 20 2024

பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்யின் EX காதலியாக நடித்த நடிகையா இது..? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி சவுத்ரி தயாரிப்பில் தளபதி விஜய், சங்கீதா, சார்லி, நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பூவே உனக்காக. மேலும்  இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.


மலையாள முன்னணி நடிகையான இவர் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானார். அத்தோடு அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர், எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், உன்னருகே நானிருந்தால், வானத்தைப்போல, வாஞ்சிநாதன்  உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.


மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் அஞ்சு  பிற தென்னிந்திய மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர்  மலையாளத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.


வினைச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அஞ்சுவிற்கு ஒரு மகள் இருக்கிறார். அத்தோடு இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தையும் தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement