• Sep 20 2024

திமிரு படத்தில் வில்லியாக நடித்த நடிகையா இது?- இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சூப்பராக இருக்கின்றாரே....

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 2002-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமுராய்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' படத்தில் இவர் நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.


தொடர்ந்து, வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2008-ம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். 


மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சலார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.


இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement