தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சந்தானம்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா,. இப்படம் சந்தானத்திற்கு நல்லதொரு அடையாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.
இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் விஷாகா சிங். இதனைத் தொடர்ந்து வாலிப ராஜா போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.
மேலும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் கெரியரை மாற்றிக்கொண்டு தற்போது NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.அது மட்டுமின்றி மேடை பேச்சாளராகவும் உலக அளவில் பல conferenceகளில் பங்கேற்று வருகிறார்.
சமீப காலமாக தனக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது என கூறி இருக்கும் விஷாகா சிங், தற்போது ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.அதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!