• Sep 20 2024

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணையும் நடிகை இவரா ? வெளியானது புதிய அப்டேட்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!


அஜித் நடித்த துணிவு திரைப்படம்  வெளியானதை தொடர்ந்து   நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், படத்திலிருந்து அஜித் விலக்கப்பட்டார். இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது பின்னர் . விடாமுயற்சி என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டிந்தது.



இப்படத்தின்   முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார் இதனால் அவரும் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


அதே நேரம் பிரியா பவானி சங்கர் பிரெண்ட்ஸ்களுடன் அஜர்பைஜான் நாட்டிற்கு ட்ரிப் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் திரிஷா, சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கும் நிலையில் பிரியா பவானி சங்கரும் நடிக்கலாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement