• Nov 10 2024

நடிகர் சிவாஜியின் மகனுக்கு இப்படியொரு நிலமையா?- அதிரடியான தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம்- என்ன ஆச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் சுமார் 5 கோடிக்கும் அதிகமான கடன் தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை என தனபாக்கியம் என்டர்பிரைசஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த் மீது கடன் பாக்கி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. 

படம் தயாரிக்கப் போவதாக 4 கோடி ரூபாய் கடன் வாங்கிய நிலையில், அந்த கடனை திருப்பித் தராமல் வட்டி அதிகரித்துள்ள நிலையில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் முழு பணத்தை திருப்பித் தர மறுப்பதாக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் வழக்கு தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நிவேதா பெத்துராஜை வைத்து ஜகஜால கில்லாடி படத்தை தயாரிக்க பல்வேறு தவணைகளில் 4 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார் துஷ்யந்த் என்றும் 30 சதவீதம் வட்டியுடன் பணத்தை திருப்பிச் செல்வதாக அறிவித்து விட்டு தற்போது தர மறுப்பதாக புகார் கொடுத்துள்ளனர்.

4 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், வட்டிப் போட்டு 2022ல் 5 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்தி 500 ரூபாய் தொகையை செலுத்த வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளனர். சமரசம் செய்ய நோட்டீஸ் அனுப்பியும் ஈசன் நிறுவனம் எந்தவொரு பதிலும் சொல்லாமல் அலைக்கழித்து வந்த நிலையில், தான் இப்படியொரு வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி உள்ளனர்.


4 கோடி ரூபாய் பணத்தை கொடுக்க காரணமே சிவாஜியின் குடும்பம் என்பதால் தான் என்றும் நடிகர் ராம்குமாரின் மகன் சரியாக பணத்தை சொன்னபடி திருப்பித் தருவார் என்றே கொடுத்தோம் என எதிர்தரப்பு தெரிவித்துள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் சாமி வரும் மார்ச் 23ம் தேதிக்குள் ராம்குமார், துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement