• Nov 10 2024

நடிக்கத் தெரியாது என முத்திரை குத்தப்பட்ட பிரபலங்கள்... என்னது இவர்களுக்கே இந்த நிலையா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ஒரு சிலர் வேகமாக வளர்ந்து வருவதோடு, மற்றும் சிலர் எவ்ளோ காலம் ஆனாலும் பேசு பொருளாக மாறாமல் அதே இடத்திலே இருந்து வருகின்றார்கள்.

அந்தவகையில் சில நடிகர்களுக்கு அறவே நடிக்கவே தெரியாமல் சாட்டுக்கு படங்களை ஒப்பேத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற விமர்சனக் கருத்துக்களும் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

அவ்வாறான ஒரு சில நடிகர்கள் குறித்த விமர்சனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது பற்றி பார்ப்போம்.


அதன்படி ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக பணி புரிந்த மெர்சி சிவா அவர்கள் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான 'சென்னை 600028' என்ற படம் மூலம் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து 'சரோஜா, தமிழ் படம், தமிழ் படம் 2.0' உட்பட பல படங்களிலும் நடித்த இவர் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். இருப்பினும் இவருக்கு நடனமோ அல்லது வசனமோ சரியாக வராது என்ற ஒரு கருத்து இன்றுவரை நிலவுகிறது.


அடுத்ததாக தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக அசத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் சூர்யாவின் 'ஆதவன்' என்ற படத்தில் கிளைமாக்ஸ் சீன் ஒன்றில் தோன்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவரிடம் யாரோ "உங்களுக்கு ஹீரோவாக நடிக்கக் கூடிய திறமை உண்டு" எனக் கூற படங்களில் கதாநாயகனாகும் முயற்சியில் இறங்கினார். 

அந்தவகையில் இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரையில் உதயநிதிக்கு சரியாக வசனமும் பேசத் தெரியாது, அதேபோன்று முறையாக நடனமும் ஆட தெரியாது. காமெடி நடிகர் சந்தானத்தை வைத்து தான் அதிகளவில் அந்த படத்தை ஒப்பேத்தி  இருப்பார்கள்.

இதைத்தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த இவரின் நடிப்பில் இறுதியாக 'நெஞ்சுக்கு நீதி' என்ற படம் வெளியானது. அதுமட்டுமல்லாது தற்போது 'மாமன்னன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போடும் எண்ணத்தில் இருக்கிறாராம்  உதயநிதி ஸ்டாலின்.


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் 'சிந்து சமவெளி' என்ற படத்தின் வாயிலாக தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார். எனினும் முதல் படமே இவருக்கு சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது.

அப்படத்தினைத் தொடர்ந்து 'அரிது அரிது. சட்டப்படி குற்றம், சந்தா மாமா, பொறியாளர்' போன்ற படங்களில் நடித்திருந்தார். இவ்வாறாக இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும் சினிமாவில் முறையான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.


அடுத்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். இவர் 'வெயில்' என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையில் இவர் செய்த சாதனைகள் பல உண்டு. அதிலும் குறிப்பாக அஜித்தின் 'கிரீடம்' படத்தில் இவரது இசை ரசிகர்கள மிகவும் கவர்ந்து இருக்கிறது.

இவர் சினிமாவில் இசையமைப்பாளராகவே இறுதிவரை பயணித்திருக்கலாம். ஆனால் இவரிடமும் யாரோ ஒருவர் "நீங்கள் நாயகனுக்கான தகுதி உள்ளவர்" என கூறியதைத் தொடர்ந்து 'டார்லிங்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னரும் ஒரு சில படங்களை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இசையமைப்பாளருக்கு கிடைத்த எந்த ஒரு அங்கீகாரமமும் ஹீரோவாக மாறியதும் இவருக்கு  கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இவரைப் போலவே மற்றொரு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. இவர் தமிழ் ஹிப் ஹாப் என்கின்ற இசைக் குழுவை தொடங்கி அதன் பின்னர் 2015-ஆம் ஆண்டு 'மீசைய முறுக்கு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் 'ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2' போன்ற படங்களில் பாடகராகவும் ரசிகர்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தவர். 

அதுமட்டுமல்லாது 'மீசைய முறுக்கு' என்ற படத்தை தொடர்ந்து சிவக்குமாரின் 'சபதம், அன்பறிவு, நட்பே துணை, நான் சிரித்தால்' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் இவருக்கும் நடிப்பு சுத்தமாகவே வராது என்ற ஒரு கருத்து ரசிகர்கள் மத்தியில் உண்டு.

அத்தோடு ஆதி நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய இசை பயணத்தையும் தொலைத்துவிட்டார் எனவும் பலரும் இவரை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement