• Sep 20 2024

விடுதலை 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இது தானா?- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே ....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் விடுதலை. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் முதல் பாகத்தில், சூரி ஹீரோவாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக போர்ஷன்கள் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விடுதலை 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியை என்கவுன்ட்டர் செய்யும் பொறுப்பு சூரிக்கே வழங்கப்படுமாம். முதல் பாகத்தின் இறுதியில் தனது காதலியை போலீஸ் நிர்வாணப்படுத்தி அடிக்கும் கொடுமையில் இருந்து காப்பாற்ற விஜய்சேதுபதியை சூரி பிடித்துக் கொடுப்பார். அதன், பின்னர் தான் பெருமாள் வாத்தியார் பற்றியும் அவர் ஏன் மக்கள் படையை உருவாக்கினார் என்பதை சூரி அறிந்து கொண்டு அவரை ஃபாலோ செய்ய ஆரம்பிப்பார் என்பது முதல் பாதியின் கிளைமேக்ஸிலேயே காட்டி விட்டனர்.


இந்நிலையில், விடுதலை 2 கிளைமேக்ஸில் பெருமாள் வாத்தியாரை சுட சூரிக்கு ஆர்டர் கொடுக்கப்படும் என்றும், அவர் முடியவே முடியாது என மறுக்க, உடனடியாக அருகே இருக்கும் இன்னொரு போலீஸ் அநேகமாக சேத்தன் துப்பாக்கியை எடுத்து பெருமாள் வாத்தியாரான விஜய்சேதுபதியை சுட்டுக் கொன்று விடுவார் என்றும் அந்த கோபத்தில் சூரி சக போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு காட்டுக்கு சென்று பெருமாள் வாத்தியாராகவே மாறிவிடுவது தான் விடுதலை 2 படத்தின் கதை என்கின்றனர். 


Advertisement

Advertisement