'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளரான சரவணன் அருள் பற்றி இன்று தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில் இவர் தனது கடைக்கான விளம்பரத்தில் தானே நடித்து பட்டிதொட்டியெங்கும் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் இவர் விளம்பரத்தில் நடிப்பதை பலரும் கேலி, கிண்டல் செய்து சிரித்திருந்தனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது 'தி லெஜண்ட்' என்ற பெயரில் உருவான தமிழ் திரைப்படத்திலும் சரவணன் அருள் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நாயகியாகவும், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
சரவணன் அருள் நடிப்பில் உருவான இப்படமானது இரு தினங்களுக்கு முன் வெளியாகிய நிலையில் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'சூப்பர் ஹீரோ' என்ற படத்திலும் சரவணன் அருள் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது லெஜண்ட் சரவணன் அருளின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சரவணன் அருளின் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். எனினும் இவர்களது புகைப்படங்கள் வெளியாகாது சரவணன் அருளின் மகளுடைய புகைப்படமே வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- மீண்டும் DCEU வில் இணையவுள்ள முக்கிய நடிகர்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ஹாலிவுட் ரசிகர்கள்..!
- மாலைப் பொழுதில் ஹரீஷ் கல்யாணுடன் உல்லாசப் பயணம் செய்த அதுல்யா…எதனால் தெரியுமா..?
- சிறந்த மனைவிக்கு முன்னுதாரணம் நடிகை பிரணிதா…என்ன செய்தார் தெரியுமா..?
- போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை…கைது செய்த போலீஸார்..!
- வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராகும் பிரபல நடிகை…சம்மதம் தெரிவித்த கணவன்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!