• Sep 20 2024

அஜித்தின் 'விடாமுயற்சி' பட கெட்டப் இது தானா? - உடல் மெலிந்து இப்படி ஃபிட்டா மாறிட்டாரே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் தான் துணிவு பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் மாஸ் காட்டியது…அதனால் அவரது 62வது படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியது.லைகா தயாரிப்பில் உருவாகவிருந்த ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது ஆனால் தற்போது விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.பல சர்ச்சைகள் இருந்த நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது..

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏகே 62 அபிஸியல் அப்டேட் வெளியானது. ஆனால் அப்போது அஜித் பைக் டூரில் இருந்ததால் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கவில்லை. அதேபோல், மகிழ் திருமேனியும் பைனல் ஸ்க்ரிப்ட் ஒர்க்கில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு குறித்து தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.

இதனிடையே தல அஜித்தும் தொடர்ச்சியாக பைக் ட்ரிப் செல்வதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமாவதன் காரணம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து வருவதாகவும்,அதனால் தான் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித் முன்பைப் போல வெயிட் லாஸ் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார் எனவும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் பலரால் சொல்லப்பட்டது.

இதையெல்லாம் உடைக்கும் விதமாக தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட இந்த போட்டோவில் அஜித் ரொம்பவே ஸ்லிம்மாக காணப்படுகிறார்.பார்ப்பதற்கு இளமையாகவும் உள்ளார் என அனைவராலும் இந்த புகைப்படம் பரவப்பட்டு வருகிறது..


Advertisement

Advertisement