• Sep 20 2024

திருமதி செல்வம் சீரியல் நடிகர் சஞ்சீவ் வெங்கட்டின் பிரமாண்ட வீடு இது தானா?- செட சூப்பராக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் சஞ்சீவ் வெங்கட். இவர் நடித்த திருமதி செல்வம், கண்மணி, யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றது. அதிலும் திருமதி செல்வம் சீரியலை பார்க்காத இல்லத்தரிசிகளே இல்லை எனலாம்.


மேலும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பனான இவர் விஜய்யுடன் இணைந்து பத்ரி, புதிய கீதை ,மாஸ்டர் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இது தவிர ஏனைய நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். அத்தோடு விஜய்டிவியில் அண்மையில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக பங்கு கொண்டிருக்கின்றார்.


இந்த நிலையில் தற்போது சஞ்சீவ் ஒரு பெரிய வீட்டில் வசித்து வருகிறார். தற்போது அவரது வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement