தமிழ் சின்னத்திரையில் மக்கள் அதிகமாக விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது தான் பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.அத்தோடு காடு சிங்கம் ராஜா என வித்தியாசமான ப்ரோமோ வெளியாகியதால் இந்த சீசன் சுவாரஸியமாக இருக்கும் எஎன ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது 6வது சீசனிற்காக தயாராகியுள்ள பிக்பாஸ் செட்டும் காட்டை மையமாக கொண்டு தான் உருவாகியுள்ளது. பிரம்மாண்டமாக போடப்பட்ட செட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.
மேலும் இந்த சீசனில் பங்குபற்றும் பிரபலங்கள் பற்றிய தகவல்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!