விஜய்டிவியில் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் இணைந்து கொண்டவர் தான் மணிமேகலை. இவர் இதற்கு முதல் சன்மியூசிக் சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக கடமையாற்றினார்.
தொடர்ந்து நடன கலைஞர் உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர் தனது பெற்றோரை பிரிந்த வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இதனாலே மீண்டும் சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வந்தார்.
இது தவிர விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளில் இவர் பங்குபற்றி வந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியே இவருக்க சிறந்ததொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாகவும் பங்கேற்க ஆரம்பித்தார்.தற்போது அந்த ஷோவில் முக்கிய நட்சத்திரமாக அவர் மாறி இருக்கிறார். சின்னத்திரையில் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் குக் வித் கோமாளி மூலமாக கிடைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மணிமேகலை இன்ஸ்டாகிராமில் அவரது குழந்தை பருவ போட்டோஸ் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.இது தவிர தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!