• Nov 19 2024

ஜெயிலர் கதை இது தானா..? இணையத்தில் கசிந்த தகவல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை முதல்முறையாக இயக்கினார் நெல்சன் தீலிப்குமார். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து பல வருடங்களுக்கு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அத்தோடு முதல் இரண்டு படம் மெகா ஹிட் கொடுத்தால் மூன்றாவது படம் பெரிய ஹீரோவிடம் கமிட்டாகலாம் என்ற விதியின்படி அடுத்ததாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் நெல்சன் தரப்பு பெரும் அப்செட்டானது.



இதற்கிடையே பீஸ்ட் பட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதே ரஜினி படத்தை இயக்குவதற்கு கமிட்டானார் நெல்சன். படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு, நேபாளம், மங்களூரு என பல இடங்களில் விறுவிறுப்பாக் நடந்துவருகிறது. தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் ரஜினிக்கு தோல்வியை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது ரஜினியும், அவரது ரசிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது ஒரே நாளின் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் ஜெயிலர் படத்தின் கதை என கூறப்படுகிறது.அத்தோடு  அந்த இரவில் நடக்கும் பல சம்பவங்களை நெல்சன் திலீப்குமார் கச்சிதமாக இணைத்திருக்கிறார் எனவும் திரைக்கதை மிகவும் அருமையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



லோகேஷ் கனகராஜ் இயக்கி மெகா ஹிட்டான கைதி படத்திலும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் கதைக்களமாக இருக்கும். அதனை மிக நேர்த்தியாக திரைக்கதைக்குள் கொண்டு வந்திருப்பார் லோகேஷ்.மேலும்  ஒருவேளை ஜெயிலர் படமும் ஒரு இரவில் நடக்கும் கதையாக இருக்கும்பட்சத்தில் கைதி ஃபார்முலாவை ஜெயிலர் ஃபாலோ செய்கிறார் என்றே எடுத்துக்கொள்ளப்படும் என பலர் தெரிவித்துஇருக்கின்றனர். அதேசமயம் நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குநர் என்பதால் தனது பாணியில் புதுமையாக ஜெயிலர் கதையை சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கையும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement