• Nov 17 2024

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மா இவர் தானா?- ஜான்வி கபூர் போட்ட உருக்கமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

இன்று லேடி சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் நயன்தாரா, மஞ்சு வாரியர் ஆகியோருக்கு ரோல் மாடல் ஸ்ரீதேவி தான். அந்த அளவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஸ்ரீதேவி.

300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு குஷி, ஜான்வி என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி 2000-ம் ஆண்டு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். 


இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்த ஸ்ரீதேவி கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.பின்னர் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு துபாய்க்கு கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த அவர், அங்குள்ள பாத்ரூமில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது மறைவு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் தன் படங்களின் மூலம் இன்றளவும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.


இந்நிலையில் இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அவரை நினைவுகூர்ந்து மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் அவரது அம்மா மடியில் அமர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு அவர் உருக்கமாக பதிவொன்றையும் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement