• Sep 20 2024

டிஎஸ்பி படத்தில் பார்த்த உருவமா இது?- வெயிட்டை குறைத்து ஸ்மாட்டான ஆணழகனாக மாறிய விஜய்சேதுபதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் சாதிக்க ஏகப்பட்ட முயற்சிகளை செய்து தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி.அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட், துணை நடிகர், வில்லன், ஹீரோ, மாஸ் வில்லன் என வெரைட்டி காட்டி நடித்து வருகின்றார்.

இவரது நடிப்பில் இறுதியாக டி எஸ் பி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே இத்திரைப்படம் பெற்றது. இந்த நிலையில் உடல் எடையை குறைத்து செம அழகாக மாறி உள்ள புதிய செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்


இதனால் டிஎஸ்பி படத்தில் பார்த்த உருவமா இது? என ரசிகர்கள் கொஞ்சம் கூட நம்ப முடியாமல் பித்துப் பிடித்துப் போயுள்ளனர். சிம்பு, குஷ்பு எல்லாம் டிரான்ஸ்ஃபர்மேஷன் பண்ணும் போது நான் பண்ண மாட்டேனா என ஆணழகனாகவே மாறி உள்ளார் விஜய்சேதுபதி.

நானும் ரவுடிதான் படத்தில் இருந்தது போல காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கூட மாற முடியாமல் ரொம்பவே உடல் எடை அதிகரித்த தோற்றத்தில் இருந்தார் விஜய்சேதுபதி. இந்நிலையில், இப்படியொரு லுக் எந்த படத்திற்காக இந்த அதிரடி மாற்றம் என ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement