• Nov 19 2024

இந்தியன் மற்றும் அவ்வை சண்முகி படங்களில் கமலுக்கு மேக்கப் போட்டவர் இவர்தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் இந்தியன்.இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.300 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் தொடங்கிய இதன் படப்பிடிப்புகள் பல தடைகளை சந்தித்தது. 

இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் கமல் அங்கு தனது இந்தியன் 2 பணிகளை தொடங்கி உள்ளார். 


கமலுக்கு இந்தியன் தாத்தா மேக்கப்பும், அவ்வை சண்முகியில் பெண் மேக்கப்பும் போட்டவரான ஹாலிவுட் மேக்அப் நிபுணர் மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மைக்கேலின் மகளும் ஹாலிவுட் நடிகையுமான மெக்கென்சி உடன் இருந்தார்.

சந்திப்பு படத்தை வெளியிட்டுள்ள மெக்கென்சி. இந்த வாரத்தின் மிக சிறந்த தருணம் கமலை சந்தித்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் கமல் மைக்கேலுடன் இந்தியன் 2 மேக்அப் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

 அத்தோடு மெக்கன்சியும் இந்தியன் 2வில் நடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்புகள் இன்று முதல் அமெரிக்காவில் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement