பிக்பாஸ் வீட்டில் நாட்கள் நெருங்க நெருங்க போட்டியாளர் யாராவது ஒருவர் வெளியேற பணப்பெட்டி வைக்கப்படும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.மேலும் இதில் ஆசைப்பட்டு எடுக்க போட்டிபோட்டு சண்டை இட்டது சீசன் 4-ல் நடந்தது. ரியோ எடுக்க முயல கேபிரில்லா எடுத்துச் சென்றார்.போன சீசனில் தாமரை எவ்வளவு பணம் வந்தாலும் எடுக்கமாட்டேன் என கூறி வைராக்கியமாக இருக்க ரூ.15 லட்சம் வந்தவுடன் சிபி எடுத்துக்கொண்டு சென்றார்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தாங்கள் தொடர்ந்து நீடிப்பதற்காக சகல வித்தைகளையும் காட்டுவார்கள். நல்லவர்கள் போல் நடிக்க முயன்று சுயரூபம் வெளிப்பட்டு வெளியேறுவார்கள். சிலர் தாங்கள் செய்வது சரி என நினைத்துக்கொண்டு செயல்பட்டு வெளியில் பொதுமக்கள் எண்ணத்துக்கு மாறாக செயல்பட்டு வெளியேற்றப்படுபவர்கள் இருப்பார்கள். அத்தோடு சிலர் இயல்பாக இருந்து போட்டியாளர்களால் ஒதுக்கப்படுவார்கள் ஆனால் பொதுமக்கள் சிந்தனை வேறு விதமாக இருக்கும்.
மேலும் இதில் பிக்பாஸ் போட்டியில் கடைசி வரை வருபவர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை அடைய முடியும். அத்தோடு மற்றவர்கள் இருந்தவரை கிடைக்கும் சம்பளம் லாபம், கிடைக்கும் பெயர் லாபம்.எனினும் இதைக்கூட இம்முறை போட்டியாளர்கள் கூறி ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள், 2 வது, 3-வது வருபவர்களுக்கும் பரிசு கொடுக்கலாமே என ஆதங்கப்பட்டனர். ஆனால் பிக்பாஸ் அதை செய்வதில்லை. இதனால் முக்கால் கிணறு தாண்டிய பின்னர் போட்டியாளர்கள் மனதை மயக்க சூட்கேஸில் பணம் வைக்கப்படும்.அத்தோடு 1 லட்சம் என ஆரம்பித்து தொகை கூடிக்கொண்டே போகும்.
ஆசைப்படுபவர்கள் எடுக்கலாமென நினைப்பவர்கள் இடையே கண்ணுக்கு தெரியாத போட்டி நடக்கும். எனினும் சில நேரம் அடுத்தவர்களை அவர்கள் அறியாமல் கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. 10 லட்ச ரூபாய் வந்தால் நாம் எடுத்துக்கொண்டு போகலாம் என நினைப்பவர் அதற்காக காத்திருக்கும்போது 7 லட்ச ரூபாய் வரும்போதே ஒருவர் தூக்கிச் செல்லவும் வாய்ப்பிருப்பதால் மடியில் நெருப்பைக்கட்டிக்கொண்டு இருப்பார். மேலும் இப்படி 4 வது சீசனில் ரியோ கேரியல்லாவுக்கு நடந்தது.
ரியோ நாம் இறுதி வரை வர முடியாது நல்ல தொகை வந்தால் போகலாம் என நினைத்துக்கொண்டிருந்தார். கேப்ரியல்லாவுக்கும் அதே எண்ணம் ஆனால் தொகை கூடக்கூட இருவரிடமும் மெல்லிய கண்ணுக்கு தெரியாத போட்டி நடந்தது. இறுதியில் ரியோ எடுக்கப்போகும் முன் நூலிழையில் கேரியல்லா எடுக்க ரியோவும் எடுக்க பெரிய வாக்குவாதமே நடந்தது. 5 லட்ச ரூபாயுடன் சென்றார் கேப்ரியல்லா.
அடுத்த சீசனில் பணப்பெட்டி வந்தவுடன் தாமரை தெளிவாக சொன்னார் ஒரு கோடி ரூபாய் வந்தாலும் எடுக்க மாட்டேன். அத்தோடு முழுப்போட்டியையும் ஆடிவிட்டுத்தான் போவேன் என்று தெரிவித்திருந்தார். 15 லட்ச ரூபாய் வந்தபோது சிபி டீசண்டாக அந்தப்பணத்தை எடுக்கும் முன் தாமரையிடம் நான் பணத்தை எடுக்கப்போகிறேன் உங்களுக்கு தேவை என்றால் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு எடுத்துச் சென்றார்.
மேலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் தயாராக வந்திருப்பார்கள் போல இன்று காலை டைனிங் ஹாலில் அசீம், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அசீம் பணப்பெட்டி பற்றி பேசினார். நான் எல்லாம் 20 லட்சம் ரூபாய் என்றால் எடுப்பேன் அதற்கு குறைவாக எல்லாம் எடுக்க மாட்டேன் என கூறினார்.போன முறை சிபி சக்ரவர்த்தி மட்டும்தான் கரெக்டாக காத்திருந்து 15 லட்சம் வந்தவுடன் எடுத்துச் சென்றார் என்று கூறியவர் அதுபோல் செயல்படணும் என்றார். எனினும் இந்த முறை பணபெட்டி வந்தால் தூக்கிச் செல்ல பலர் காத்திருப்பது நன்றாக தெரிந்தது.
Listen News!