• Nov 10 2024

பிக்பாஸ் பிரபலத்துடன் டேட்டிங்... அர்ஜுன் மகளுடன் காதல்... உமாபதியின் உண்மை முகம் இதுதானா.?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் 'தண்ணி வண்டி, மணியார் குடும்பம்', சேரன் இயக்கிய 'திருமணம்' போன்ற படங்களில் நடித்து பிரபல்யானவர் தான் நடிகர் உமாபதி. மேலும் இவர் ராஜாக்கிளி என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு தம்பி ராமையா தான் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி உள்ளார். 


மேலும் சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவரைப்போன்று தான் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

இப்படி உமாபதி-ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ - ஹீரோயினாக இருந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் காதலிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அதுமட்டுமல்லாது இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதி சில வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான யாஷிகாவுடன் டேட்டிங் சென்றதாக சில கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து யாஷிகாவுடன் தொடர்பில் இருந்தவரைதான் அர்ஜுன் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கப்போகின்றாரா..? என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement