• Nov 10 2024

கோப்ரா ரிலீஸ் தள்ளிபோவதற்கு இது தான் காரணமா..? புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வைகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாளினி ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை பான் இந்தியா படமாக தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு இப்படத்தின் க்ளைமாக்சை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு, படக்குழு சென்றது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஷுட்டிங்கை நிறுத்தி விட்டு, படக்குழு இந்தியா திரும்பியது.தொடர்ந்து மீண்டும் 2020 டிசம்பர் மாதம் தான் படப்பிடிப்பு துவங்கி, 2021 ம் ஆண்டு மத்தியில் தான் முடிக்கப்பட்டது.

இந்த படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 25 கெட்அப்களில் நடிப்பதாக சொல்லப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அத்தோடு விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், வேறொரு காரணமும் ரிலீஸ் தள்ளிப் போவதற்குப் பின்னணியில் சொல்லப்படுகிறது.

மேலும் இப் படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். படத்தின் பட்ஜெட் எகிறியதால் தயாரிப்பாளர் சொல்லும் விலைக்கு ஒடிடி நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என கூறப்படுகின்றது.. இதுவும் ரிலீஸ் தள்ளிப்போவதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement