• Nov 19 2024

தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகியதற்கு இது தான் காரணமா?- உண்மையை வெளிப்படையாகக் கூறிய கரு.பழனியப்பன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமா சினிமாவில் பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான்  கரு.பழனியப்பன்.இதனை டுத்து சில படங்களை இயக்கியுள்ளதோடு நடித்தும் இருக்கின்றார். இருப்பினும் ஷு தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலமே இன்னும் பிரபல்யமானார்.

இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து இருந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கரு பழனியப்பன் தனது பிறந்தநாளை கொண்டாடினர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழிகாட்டி இருக்கிறது..


தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஷு தமிழ் உடனான நான்கு வருட ” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது…!சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! …..நன்றி ஜீ தமிழ், சிஜு பிரபாகரன், பூங்குன்றன் உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் !எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!! என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கரு பழனியப்பன், தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். அதில் ‘இதுபற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட கரு.பழனியப்பன், “நான் அந்தத் தொடரை ஆரம்பித்து நான்கு வருடம் ஆகிவிட்டது. முடிவை எப்போதும் நாம் தான் எடுக்க வேண்டும். இதே தன்மை கொண்ட நிகழ்ச்சி வேறொரு தளத்தில் கொண்டு வர தீவிரமான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.


தமிழில் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். கொஞ்சமும் மாற்று குறையாமல் அடுத்த முயற்சி இருக்கும். ஒரு பெரும் வாசற்படியை கொண்டு வந்து சேர்த்த விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நான் என்னை அர்ப்பணித்து வாழ்கிறேன் என்பதும் உண்மை. நிறுவனத்தின் மீது பெரிதும் புகார் இல்லை. அடுத்த வாரம் இன்னும் பெரிய தளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை முன் வைக்க வாய்ப்புவதற்கான அறிவிப்பு காத்திருக்கிறது. அடர்ந்த பொருட்களில் அதில் விவாதங்களை பேசிக்கொள்ளலாம். அதே முழுமையோடு புது நிகழ்ச்சியிலும் என்னை முன்வைப்பேன் என உறுதியளிக்கிறேன்” என்றார்.


Advertisement

Advertisement