• Sep 20 2024

லியோ படத்தில் நடிக்க மறுத்தமைக்கு இது தான் காரணமா?- மனம் திறந்து பேசிய நடிகர் விஷால்

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி ரிலீஸானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக கைதி, விக்ரம் படங்கள் அளவிற்கு லியோ திரைக்கதை அமையவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

லியோவில் லோகேஷின் ஸ்க்ரிப்ட் சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்களே கூறி வந்தனர். லியோ முதல் பாதி லோகேஷ் படமாகவும், இரண்டாம் பாதி விஜய் படமாகவும் உருவாகியுள்ளது. மொத்தமாக பார்க்கும் போது விஜய், லோகேஷ் என இருவரது படங்களாகவும் லியோ இல்லை என ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்திருந்தனர்.


 லியோ படத்தின் கதையில் விஜய் சில திருத்தங்கள் செய்திருக்கலாம், அதனால் விஜய்க்காக இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் விட்டுக் கொடுத்துவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் லலித் குமார் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். 

லியோ படம் துவங்கியபோதும் இப்படத்தில் பலரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சாண்டி, அர்ஜூன், சஞ்சய் தத் என பல பெயர்கள் சொல்லப்பட்டது. தற்போது படம் வெளியான நிலையில் அவர்கள் எல்லோருமே படத்தில் இருக்கிறார்கள்.

முதலில் அர்ஜூன் நடித்த வேடத்தில் விஷாலைத்தான் கேட்டுள்ளார் லோகேஷ். ஆனால், அவர் நடிக்கவில்லை. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய விஷால் ‘சில படங்களில் நடித்துக்கொண்டிருந்ததாலும், துப்பாறிவாளன் 2 படத்தை இயக்கி, நடிக்க வேண்டியிருந்ததாலும் எனக்கு நிறைய வேலை இருந்தது.


மேலும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது என்பது எனக்கு சரியாக வராது. ஒரு நேரத்தில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே என்னால் வாழமுடியும். இதை லோகேஷும் புரிந்து கொண்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என விஷால் சொல்லியிருந்தார்.

Advertisement

Advertisement