கோலிவுட் சினிமாவில் பல சர்ச்சைகளின் பின்னர் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வரும் நடிகர் தான் சிம்பு. சமீபகாலமாக இவர் நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.அதிலும் மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
மாநாடுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கிராமத்து இளைஞர், மும்பையில் வேலை பார்க்கும் இளைஞர் என முத்து என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது.
பத்து தல படத்தை முடித்த சிலம்பரசன் அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது அவரது கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமையும் என கருதப்படுகிறது. அதேசமயம் வெந்து தணிந்தது காடு 2 படம் மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களுக்காக வேல்ஸ் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை சிம்பு மீறிவிட்டார் என புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.
சிம்புவுடன் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைகளை ஐசரி கணேஷ் நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால் அவர் மீது கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிம்புவிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சிம்பு திருப்திகரமான விளக்கத்தை அளிக்கவில்லை என்றால் அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
மீண்டும் ரெட் கார்ட் சிக்கலில் சிக்க விரும்பாத சிம்பு ஐசரி கணேஷ் படத்தை முடித்துக்கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கணேஷ் அனுப்பிய இயக்குநர்கள் லிஸ்ட் சிம்புவுக்கு திருப்தி தராததால் கௌதம் மேனனையே ஃபிக்ஸ் செய்ய அவர் சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் கௌதம் மேனனுக்கும், சிம்புவுக்கும் ஒரு உரசல் ஓடிக்கொண்டிருப்பதாக அண்மைக்காலமாக கோலிவுட்டில் தகவல் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கௌதம் மேனனுக்கும் சிம்புவுக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளைமேக்ஸில் மூன்று சண்டைக் காட்சிகளை எடுப்பேன் என சிம்புவிடம் கௌதம் உறுதி அளித்ததாகவும் ஆனால் ஷூட்டிங்கில் அந்த சண்டைக் காட்சியை அவர் எடுக்கவில்லை.அதனால்தான் சிம்புவுக்கும், கௌதம் மேனனுக்கும் முட்டிக்கொண்டதாக இப்போது புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு சிம்பு கமிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!