தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் தயாராகி வருகின்றது. வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வருகிற 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது.
மேலும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார். இதுவரை இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இதனைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.
வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே எஞ்சி உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் தற்போதே தொடங்கி முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சென்னையில் பிரபலமான பல திரையரங்கங்களில் வாரிசு படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த வாரிசு படத்தின் பேனர் கிழிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..!
Listen News!