• Sep 20 2024

அவர் கிட்ட நெருங்கவே எனக்கு தயக்கமாக இருக்கு... இளையராஜா பற்றிக் கூறிய ரஞ்சித்... காரணம் இதுவா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலாமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். மக்கள் மனதைக் கவரக்கூடிய வகையில் தனக்கென ஒரு பாணியில் கதையை உருவாக்க கூடிய திறமை இவருக்கு  உண்டு. இந்நிலையில் இவர் ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரரை' படத்திற்கு பிறகு 'நட்சத்திரம் நகர்கிறது' எனும் படத்தை இயக்கியிருந்தார். 


மேலும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல் ஜாசன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படமானது ஆகஸ்ட் 31-ஆம் திகதி அன்று வெளியாகவிருக்கின்றது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத், வின்சு, சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு தென்மா இசையமைத்திருக்கிறார்.  



இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் படத்தின் இயக்குநரான ரஞ்சித் பேசும் போது "'நட்சத்திரம் நகர்கிறது ' காதல் படம் அல்ல காதலைப் பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது" எனக் கூறியிருக்கின்றார்.


அத்தோடு "காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை. இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கும் வகையில் அமைந்த படம்தான் 'நட்சத்திரம் நகர்கிறது'. இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும், திரு நங்கையின் காதலைப்பற்றியும் பேசுகிறோம்.


பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக்கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்கபேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நல்லா வந்திருக்கு" எனப் படம் பற்றி புகழ்ந்து பேசியிருந்தார்.




இந்நிலையில் இவரிடம் "இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா ?" என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில் "எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு. அவர் பெரிய மேதை" எனக் கூறியிருந்தார்.


அத்தோடு "இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய இவரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான்" என்று உணர்ச்சி ததும்பும் வகையில் பேசியிருந்தார் பா.ரஞ்சித்.

Advertisement

Advertisement