தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் தனது கம்பீரமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்த நடிகர் தான் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களாக உள்ளன.
பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் இடையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அரசியலிலும் திரைவாழ்க்கையிலும் இருந்து விடுபட்டு ஓய்வெடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் திரும்பவும் மீண்டும் சினிமாவில் நடிக்க வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அந்த வகையில் தற்பொழுது வழமையான உடற்பரிசோதனை காரணமாக விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சென்னை, முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்
- சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்
- தனது கணவரை அழகாக புகைப்படம் எடுத்த கார்த்தியின் மனைவி- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்
- சிம்பு, தனுஷை ஒன்றாக வைத்து ஒரு படம் பண்ண போறேன்-இயக்குநர் வெங்கட் பிரபு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!