பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியானது பல பஞ்சாயத்துக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. இவருக்கும் சகபோட்டியாளரான விசித்திராவுக்கும் இடையில் ஒரு மோதல் நடந்து வந்தது.
அதாவது எல்லோரும் 12ம் வகுப்பு வரை கட்டாயம் பல்வி கற்ற வேண்டும் என விசித்திரா தெரிவித்திருந்தார். ஆனால் ஜோவிதா தனக்கு படிப்பு வராததால் படிப்பை விட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜோவிகா எப்படிப்பட்ட மாணவி, அவள் ஏன் பள்ளியை விட்டு நின்றாள் என அவரது ஆசிரியை பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலைதளத்தின் கவனத்தை மொத்தமாக கவர்ந்துள்ளது.
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. நான் ஒரு 6 வருசமா ஆசிரியரா பணியாற்றி இருக்கேன் .என்னால முடிஞ்ச வர நான் என் குழந்தைங்கள "படி டா பரமான்னு" சொல்லி சொல்லி படிக்க வச்சுருக்கேன். நிறைய பேர் வைக்குற பெரிய குற்றச்சாட்டு இப்போ உள்ள ஜெனரேஷன் குழந்தைங்க ரொம்ப அராத்து.. ஒன்னும் சொல் பேச்சு கேக்க மாட்டாங்க... இவங்களுக்கு பொறுமை இல்லை ...இதுலாம் தான் .
ஆனா அதே சமயம் குழந்தைங்க face பண்ற பிரச்சனைகளை ரொம்ப அலட்சியமா கடந்து போகிறோம். வீட்டுல நடக்குற குடும்ப பிரச்சனைல இருந்து, ஸ்கூல்ல நடக்குற bully ,slut Shaming (ஆமா slut Shaming தான் , ஆமா 18 வயசுக்கு கீழ உள்ள, எல்லாரும் குழந்தைங்கன்னு சொல்ற பெண் பிள்ளைங்க face பண்ற ஒரு பிரச்னையா தான் )அதுவும் சக மாணவர்கள், பெத்தவங்க, so called ஆசிரியர்கள் குடுக்குற பேர் தான் இது ... சரி இது இப்போ உள்ள குழந்தைங்க தான் face பண்றங்களா??? நம்ம ஜெனரேஷன் face பண்ணலயா ????
No, நம்ம ஜெனரேஷன்ல உள்ள யாரும் வாய தொரக்கல.. நமக்கு நடந்தது Abuseனு கூட தெரியாம ...அம்மா சொன்ன கேக்கணும், டீச்சர் சொன்ன கேக்கணும்னு வளர்த்து விட்டாங்க .... நான் கூட இது மாறி abuse கடந்து வந்தவா தான். I was slut shamed by one of my teacher and my mom at my 6th grade ( 11 years old) முன்னாடி முடி விட்டு தலை சீவிட்டு வந்தேன்னு ...ஆனா உண்மையா எனக்கு தலை சீவ தெரியாம சீவிட்டு போய் திட்டு வாங்கினேன்.அப்போ எனக்கு எதிர்த்து பேச தெரியல. இது மாறி நிறைய ஒரு ஒரு நாளும் குழந்தைங்க face பன்னிட்டு தான் இருகாங்க ... இப்போ 18 வயசுல ஸ்கூல் முடிக்காத ஜோவிகாவை எல்லாரும் பார்த்து , அவ பேசுறத கேட்டு கோவ படுறீங்க... ஆனா எனக்கு அவங்க அம்மா பிக்பாஸ்க்கு போனப்போ ஸ்கூல்ல எப்படி இந்த கொடூரமான உலகத்த face பண்ணணு தெரியாம இருந்த ஜோவிகாவை தெரியும்...
"அவங்க அம்மாவை எல்லாருக்கும் புடிக்குது புடிக்கல அது விஷயம் இல்லை " நானும் ஸ்டாப் ரூமில் தான் உட்கார்ந்து இருப்பேன்... என் காதுப்படவே என் கூட வேலை பாக்குற teachers என்னலாம் பேசுனாங்கனு எனக்கு தான் தெரியும். அதோட நிக்கலையே...கூட படிக்குறவங்க அவ்ளோ Bully.அந்த பள்ளில புதுசா சேந்துருந்தா...
இது எல்லாத்துக்கும் யாரு பொறுப்பு ??? பட்ட படிப்பு படிச்சுட்டு already hardships face பண்ற 13 வயசு பொண்ண Handle பண்ற விதமா இது ?? அவ படிக்கவும் நிறைய கஷ்ட பட்டிருக்கா ... அவ படிக்க புடிக்காமா படிக்கலன்னு சாத்தியமா சொல்ல முடியாது... என்னோட கிளாஸ்ல அவ்ளோ துரு துருன்னு இருப்பா... கிளாஸ்க்கு முதல்ல ஓடி வர பொண்ணு அவ தான் ...(அதுக்கும் எப்போ பாரு ஓடிட்டே கிடக்கணு திட்டு வாங்கிருக்கா )..நல்லா வரைவா ...டிசைன் பண்ணுவா ..அவளை நம்பி ஒரு பொறுப்பை குடுத்தா ,சரியா செய்வா ...ஆளுமை தன்மை (leadership qualities)நிறைய இருக்கு அவகிட்ட ... படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் .ஆனா அதே சமயம் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது .. வெறும் ஏட்டு கல்வியா மட்டும் கல்வி இருக்க கூடாது ... அதை சரியான முறைல சரியான வகைல குழந்தைங்க கிட்ட போய் சேர்க்கலன்னா இது மாறி பிரச்சனைகள் வந்துட்டே தான் இருக்கும் B.Ed-ல உளவியலும் பாட திட்டத்துல இருக்கு..
ஆனா எத்தனை பேரு அத குழந்தைங்க மேல செலுத்துறாங்க ???? என்ன பொறுத்த வரை ஆசிரியர் வேலை பாக்குறவங்க அத வெறும் தொழிலா ...சம்பாதிக்க ஒரு source-ah பாத்திங்கன்னா... அவங்க ஆசிரியர் வேலை பாக்க தகுதி இல்லாதவங்க... அவ கோவத்துக்கு பின்னால ஒளிஞ்சு இருக்க..." எப்படி படிக்கன்னு தெரியாம" "அதுக்கான Guidence கிடைக்காம கஷ்ட பட்ட "அவ்ளோ bully face பண்ணி" ஒரு குழந்தை தான் எனக்கு கண்ணுக்கு தெரியுது. அவள் வயசுக்கு தெரிஞ்ச மாறி அவ பேசிட்டா அவ்ளோ தான் . என்னோட பர்சனல் விஷயத்துனால அந்த பள்ளில இருந்து வேற ஒரு ஸ்கூல் மாறிட்டேன் .ஒரு வேலை அங்க நான் இருந்திருந்தா... கண்டிப்பா அவளை படிக்காமா ஸ்கூல் drop பண்ண விட்டிருக்க மாட்டேன்... முடிஞ்ச வர என்ன செய்ய முடியும்னு பாத்துருப்பேன் . படிக்கணும்! எல்லாரும் படிக்கணும் ...எல்லாமே படிக்க ...வரலன்னாலும், வர்றத படிக்கணும்.... ஆனா அவங்க படிக்குறதுக்குக்கான சூழலை எப்பாடு பட்டாது நம்ம ஏற்படுத்தி குடுக்கணும் ...அது நம்ம கடமை." என பதிவிட்டுள்ளார். ஜோவிகாவுக்கு நடந்தது போல பல மாணவர்களுக்கு இதே போன்ற பிரச்சனைகள் பள்ளிகளில் வருவதை ஒரு ஆசிரியர் தைரியமாக சுட்டிக் காட்டி உள்ளார். இந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது.
Listen News!