• Sep 21 2024

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கார்த்தி- அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக சுல்தான் திரைப்படம் வெளியாகியது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால். இவரது எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் பிஸியான நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் விருமன் திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.

மேலும் இவரது நெருங்கிய நண்பன் தான் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா. இவர் கார்த்தியின் பருத்தி வீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'விருமன்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த நிலையில் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு விலை உயர்ந்த பிரிமியம் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அந்த பருவத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். திரையுலகில் யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அவருக்கு இந்த அன்பு பரிசை வழங்கியதாக கார்த்தி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement