பிரபலங்கள் வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்பொழுது இவர் விஜய் நடிப்பில் இயக்கும் லியோ படத்தின் அப்டேட்டை குறித்து வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய்யின் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படத்திற்கு பிறகு களம் இறங்கும் கேங்ஸ்டர் படம் தான் லியோ. இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தட், மிஸ்கின், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் இருக்கு காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக சமீப காலமாக எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறித்து பார்க்கையில் அப்டேட் கொடுக்க முன்வரும் லோகேஷ் கனகராஜிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் தளபதி என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது.
மேலும் படத்தில் ஒரு வித சஸ்பென்சை ஏற்படுத்தினால் மட்டுமே அவை வெற்றி பெறும். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது சென்னையில் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாததால் படத்தின் அப்டேட்டும் லீக் ஆகவில்லை என்பது முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.
Listen News!