• Nov 17 2024

விவாகரத்து ஆகி வாழ்க்கை சீரழிந்ததற்கு காரணம் இதுதானா? - மனம் திறந்த நடிகை சுகன்யா...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின. இதன் காரணமாக விஜயகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார் சுகன்யா.

 ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து மெகா ஹிட்டான படம் சின்ன கவுண்டர். அதில் சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் வெகுளித்தனமான கிராமத்து பெண்ணாக தோன்றிய அவர் எமோஷனல் காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக் அவருக்கு ரசிகர்களும் பெருகினர். அதேபோல் மகாநதி படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

 சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்த சுகன்யா ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி சில சோலோ ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் அவர், கன்னத்தில் முத்தமிட்டால் படத்த்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமாகி ஒரே ஆண்டில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து பெறும் அளவுக்கு சுகன்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என பலரும் யூகித்து வந்தனர்.

பெண்கள் பயந்து ஓட தேவையில்லை. கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து பெறலாம் அல்லது நீதிமன்றம் சென்றும் விவாகரத்து பெறலாம். விவாகரத்து பெற தயக்கம் இருந்தால் கொடுமையான காலங்களை குடும்ப வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்துதான் பெண்கள் வரவேண்டும்" என்றார்.

இதற்கிடையே சுகன்யா ஒரு முன்னாள் அமைச்சரின் கட்டுப்பாட்டில் ரொம்ப நாள்கள் இருந்தார். சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்க சுகன்யாவுக்கு பெரும் ஆசை இருந்தாலும் அந்த அரசியல்வாதியை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சொல்லப்போனால் அரசியல்வாதியால்தான் சுகன்யாவின் வாழ்க்கை பாதி நாசமாகிவிட்டது என திரைத்துறையில் ஒரு பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement