தமிழ் சினிமாவின் இயக்குநராக நெல்சன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் பீஸ்ட். இத் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தாலும் விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குவதாக கூறப்படுகின்றது. இப்படம் ரஜினியின் 169 படம் என்பதோடு இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிழ் நாடகக் குழுவான யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்டின் (யுஏஏ) ‘சாருகேசி’ நாடகத்தைப் பார்த்திருந்தார்.
அதனால் ஈர்க்கப்பட்ட அவர், நடிகர்கள் மற்றும் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதோடு தனது இல்லத்தில் அனைவருக்கும் விருந்தும் அளித்துள்ளார்.அந்தப் படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன .நாடக கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரன் UAA குழுவின் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புஃஸ்அப் செய்யும் கமல்ஹாசன்- இணையத்தில் வைரலாகும் வீடியோ
- வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிச்சாச்சு- செம குஷியில் சிம்பு ரசிகர்கள்
- நாடக கலைஞர் போல வேடமிட்டு மிரட்டியிருக்கும் இயக்குநர் செல்வநாயகன்-பகாசூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
- மறைந்த நடிகர் ‘பூ’ராமுவின் இறுதி ஊர்வலத்தில் பறை அடித்துக் கொண்டு சென்ற பிரபல நடிகர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!