• Nov 14 2024

எம்.ஜி.ஆரைக் கொலை செய்த ராதாரவியின் தந்தை... இதுதான் காரணமா..? நீண்டநாள் கழித்து வெளிவந்த உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் மறைந்தாலும் இன்றும் பல மக்கள் மனங்களில் குடி கொண்டிருக்கின்றார். அதற்கு முக்கிய காரணம் அவர் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளே ஆகும்.


இவ்வாறு மக்களால் கொண்டாடப்பட்ட ஒருவராக இருந்த எம்.ஜி.ஆரை, கடந்த 1964-ஆம் ஆண்டு நடிகவேல் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவமானது நடந்து முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை அவர் எதற்காக சுட்டார் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் உலாவருகின்றன. 

இருப்பினும் அவர் இருந்தமைக்கான உண்மை காரணம் என்ன என்பது தெரியாமலே இருந்து வந்த நிலையில், எம்.ஆர்.ராதாவின் மகனான ராதா ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் அதுகுறித்து மனம்திறந்து ஓப்பனாக பேசி உள்ளார்.

அதாவது "எங்க அப்பாவும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் வாசு என்பவர் ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்கிற படத்தை எடுக்க ஒரு லட்சம் தேவைப்படுவதாக கூறி உள்ளார். உடனே என் தந்தை, நான் உனக்கு பணம் தருகிறேன் என சொல்லியுள்ளார். 

பின்னர் எம்.ஜி.ஆர். உடைய கால்ஷீட்டும் வாங்கி தருவதாக சொல்லியுள்ளார். அது எனது தந்தையின் 100-ஆவது படம். அதற்காக ஆலந்தூரில் உள்ள சேட்டு ஒருவரிடம் எங்கள் தோட்டத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ஒரு லட்சம் வாங்கி கொடுத்தார்.

நியாயப்படி பார்த்தால் அந்த ஒரு லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் வாசு தான் என் தந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர். அதை நான் தருகிறேன் என என் தந்தையிடம் சொல்லிவிட்டார். அது தான் என் தந்தைக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட காரணம் முதல் காரணம்.


இவ்வாறாக பணத்தை திருப்பி கொடுக்காமல் 3, 4 நாள் என் தந்தையை சுத்தவிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். என் தந்தை மிகவும் கோபக்காரர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முக்கிய விடயமே கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பது தான். எம்.ஜி.ஆர். பணத்தை கொடுக்காமல் சுத்தவிட்ட கோபத்தில் தான் அவரை துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார் என் தந்தை.

அதுமட்டுமல்லாது இந்த வழக்குல என் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைத்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதை 3 வருடமாக மாற்றினோம். அந்த சமயத்தில் ஆட்சி மாற்றம் நடந்து கொண்டிருந்தது.

பின்பு கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் என் தந்தையை விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த சமயத்தில் கலைஞர் மட்டும் இல்லேனா என் தந்தையை ஜெயில்லயே வச்சி முடிச்சிருப்பாங்க" என ராதாரவி அந்தப் பேட்டியில் கூறி உள்ளார்.

Advertisement

Advertisement